சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் குளோரியா ஃபியூனிகுலர் ரயில் தடம் புரண்டது: 15 பேர் வரை உயிரிழப்பு
லிஸ்பனில் ரயில் தடம் புரண்டதில் 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
தடம் புரண்ட ரயில்
லிஸ்பனில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க கூடிய குளோரியா ஃபியூனிகுலர் ரயிலின் பெட்டி ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த பயங்கர விபத்தில் 18 பேர் வரை காயமடைந்த நிலையில் அதில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
JUST IN: Lisbon's iconic Gloria Funicular derails, causing injuries pic.twitter.com/d57zhaKCtV
— BNO News Live (@BNODesk) September 3, 2025
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளில், சுற்றுலா பயணிகளின் விருப்பமான குளோரியா ஃபியூனிகுலர் ரயிலின் பெட்டி ஒன்று முற்றிலுமாக சேதமடைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.
மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் சொந்த நாடு என எதுவும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பிரித்தானியர்களுக்கு தேவையான உதவியை வழங்க லிஸ்பன் அதிகாரிகளுடன் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |