இங்கு நடந்ததை உங்கள் மோடியிடம் போய் சொல்.., காஷ்மீரில் பெண்ணை மிரட்டிய தீவிரவாதி
ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலின்போது, கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணை தீவிரவாதிகள் மிரட்டியுள்ளார்.
பெண்ணுக்கு மிரட்டல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலின் போது கர்நாடகாவைச் சேர்ந்த பல்லவி என்ற பெண், தனது கண்முன்னே கணவர் மஞ்சுநாத்தைப் பறிகொடுத்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கணவர் மஞ்சுநாத் மற்றும் மகன் அபிஜயாவுடன் சுற்றுலாவுக்கு பஹல்காம் வந்தேன். பிற்பகல் 1.30 மணியளவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் என் கண்முன்னே கணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது எனது மகனையும் என்னையும் சுட்டுக் கொல்லுமாறு தீவிரவாதிகளிடம் கெஞ்சினேன். அதற்கு தீவிரவாதிகளில் ஒருவர், நான் உன்னை கொல்ல மாட்டேன். இங்கே நடந்ததை உங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் போய் சொல் எனக் கூறினார்| கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
ஆனால், இந்த தாக்குதலின் போது தங்களை காஷ்மீர் இளைஞர்கள் காப்பாற்றியதாகவும் பல்லவி கூறியுள்ளார்.
அதாவது பல்லவியின் மகன் கன் நல்ல மதிப்பெண் பெற்றால் சுற்றுலா அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருகின்றனர். அதன்படி தான் சுற்றுலாவுக்காக காஷ்மீருக்கு வந்துள்ளனர். அப்போது தான் இந்த துயர் சம்பவம் நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |