கோவாவில் நிகழ்ந்த இரட்டைக் கொலை: குற்றவாளியின் மொபைலில் இருந்த புகைப்படங்களால் அதிர்ச்சி
இந்தியாவின் கோவா மாநிலத்தில் நடந்த ஒரு இரட்டைக் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவரின் மொபைலில் இருந்த பெண்களின் புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவாவில் நிகழ்ந்த இரட்டைக் கொலை

சமீபத்தில் கோவாவிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டார்கள்.
அந்தப் பெண்களில் ஒருவருடன், ரஷ்ய நாட்டவரான அலெக்சி லியோநோவ் (Aleksei Leonov) என்பவரும் தங்கியிருந்த நிலையில், அந்தக் கொலை தொடர்பில் அலெக்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசார் அந்த சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், அலெக்சியின் மொபைலை பரிசோதித்தார்கள்.
அப்போது, அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு விடயம் காத்திருந்தது.
ஆம், அலெக்சியின் மொபைலில் நூறுக்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள் இருந்துள்ளன.
ஆக, அந்தப் பெண்கள் யார், அவர்களும் அலெக்சியால் பாதிக்கப்பட்டவர்களா என கேள்வி எழுந்துள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடந்துவரும் நிலையில், மக்கள் தாங்களாக எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என பொலிசார் வலியுறுத்திவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |