கோவா இரவு விடுதி தீவிபத்து வழக்கு: உரிமையாளர்கள் நாடுகடத்தல்
கோவாவில் இரவு விடுதி ஒன்றில் நிகழ்ந்த பயங்கர தீவிபத்தைத் தொடர்ந்து, அதன் உரிமையாளர்கள் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினர்.
இந்நிலையில், அவர்கள் இன்று இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
கோவா இரவு விடுதி தீவிபத்து வழக்கு
கோவாவிலுள்ள, Birch by Romeo Lane என்னும் இரவு விடுதியில், இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 6ஆம் திகதி நள்ளிரவு தீப்பற்றியது. வேகமாகப் பரவிய அந்தத் தீயில் 25 பேர் கொல்லப்பட்டார்கள்.
தீவிபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில், அந்த இரவு விடுதியின் உரிமையாளர்களான சௌரப் ருத்ராவும் கௌரவ் ருத்ராவும் தாய்லாந்துக்கு தப்பியோடினார்கள்.

அதைத் தொடர்ந்து, இன்டர்போல் வாயிலாக அவர்களைப் பிடிக்க Blue notice விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், தாய்லாந்து பொலிசார் ருத்ரா சகோதரர்களைக் கைது செய்தனர்.
இந்நிலையில், அவர்கள் இன்று இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவர்களைக் கோவா பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

அவர்கள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள். அதன் பின் இன்று இரவு அவர்கள் இருவரும் கோவா கொண்டுவரப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |