இலவசங்களின் கடவுள் என அழைக்கப்படும் மனிதர் சைக்கிளில் பயணிக்கிறார்.., யார் இந்த கோடீஸ்வரர் ?
ஜப்பானிய கோடீஸ்வரர் ஒருவர் பங்குச் சந்தையில் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், தனது சிக்கனமான வாழ்க்கை முறையால் இணையத்தில் பிரபலமாகியுள்ளார்.
யார் அவர்?
ஜப்பானைச் சேர்ந்த 75 வயது கோடீஸ்வரரான ஹிரோடோ கிரிடானி என்பவர் சிக்கனமான வாழ்க்கை முறையால் இணையத்தில் பிரபலமாகியுள்ளார்.
தான் பங்குச் சந்தையில் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், கூப்பன்கள் மற்றும் இலவசங்களைப் பயன்படுத்தி எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். பணத்தைச் சேமிப்பதற்கான அவரது அணுகுமுறையால் இவருக்கு "இலவசங்களின் கடவுள்" என்ற புனைப்பெயர் கிடைத்துள்ளது.
37 மாதங்கள் கொண்ட Canara Bank Green Deposit FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?
இவர்,1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ளார். இவரின் நிகரமதிப்பு ,100 மில்லியன் யென் ஆகும். இந்திய மதிப்பில் இதன் ரூபாய் 5.29 மில்லியன் ஆகும்.
2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இவரது செல்வம் கிட்டத்தட்ட 600 மில்லியன் யென்களாக (ரூ. 315.4 மில்லியன்) இருந்தது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் ஒரு தொழில்முறை ஷோகி (shogi) பிளேயராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர், ஜப்பானிய சதுரங்க விளையாட்டில் அவரது நிபுணத்துவம் ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் கற்பிக்க அழைப்பு வந்ததுள்ளது.
அவர் நிறுவனத்தில் இருந்த காலத்தில் தீவிரமான கவனிப்பு மற்றும் வர்த்தகத்தில் விரைவான கற்றல் மூலம், முதல் 100 மில்லியன் யென் முதலீட்டை சம்பாதித்தார்.
இருப்பினும், 2008 இல் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக பணத்தின் மீதான அவரது பார்வை மாறியது. அவர் பங்குச் சந்தை வீழ்ச்சியில் 200 மில்லியன் யென்களை இழந்தார். இது தான் அவரது சிக்கனமான வாழ்க்கை முறைக்கு காரணமாக இருக்கிறது.
இதனால், உணவு, உடை முதல் பொழுதுபோக்கு வரை 1,000 நிறுவனங்களிடமிருந்து கூப்பன்கள் மற்றும் பங்குதாரர் சலுகைகளை சேமிப்பதிலும் சேகரிப்பதிலும் கவனம் செலுத்தினார்.
இன்று அவரது தினசரி வழக்கம் கூப்பன்களைப் பயன்படுத்துவதைச் சுற்றியே உள்ளது. கூப்பன்கள் காலாவதியாகும் முன் இலவச உணவை வாங்குவதற்கு உணவகங்களுக்குச் செல்கிறார்.
இவரிடம் அதிக அளவு பணம் இருந்தபோதிலும் சிக்கனமான வாழ்க்கையை பின்பற்றுகிறார். எளிமையான ஆடைகளைத் தேர்வு செய்கிறார். மேலும், ஆடம்பர பிராண்டுகளைத் தவிர்த்து, கூப்பன்களைப் பயன்படுத்தி வாங்கிய மிதிவண்டியை தனது போக்குவரத்திற்கு பயன்படுத்துகிறார்.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் 300 இலவச திரைப்பட டிக்கெட்டுகளைப் பெறுகிறார். இவருக்கு திரைப்படங்களில் ஆர்வம் இல்லாவிட்டாலும், ஆண்டுதோறும் குறைந்தது 140 படங்களைப் பார்க்கிறார்.
இவரின் தனித்துவமான வாழ்க்கை முறைக்கு கூடுதலாக, புத்தகங்களை எழுதியுள்ளார். அதோடு, தொலைக்காட்சியில் சிக்கனமான வாழ்க்கை பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |