மனைவிக்காக தங்கச்சங்கிலி வாங்கிய இந்திய வம்சாவளி இப்போது கோடீஸ்வரர்.., லொட்டரியால் அல்ல
மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய இந்திய வம்சாவளிக்கு ரூ.8 கோடி பரிசுத்தொகை விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
மனைவிக்கு தங்கச்சங்கிலி
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் சிதம்பரம். இந்திய வம்சாவளியான இவரது பெற்றோர் சிங்கப்பூருக்கு சென்று வசித்து வருகின்றனர்.
இதில் பாலசுப்பிரமணியம் சிதம்பரம், கடந்த 21 ஆண்டுகளாக சிங்கப்பூரில் புராஜக்ட் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த 24 -ம் திகதி அன்று சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள முஸ்தபா ஜூவல்லரி கடைக்கு சென்று தனது மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கியுள்ளார். இந்த தங்கச்சங்கிலியின் மதிப்பு 6 ஆயிரம் சிங்கப்பூர் டொலர் ஆகும்.
இந்த நகை கடையில் குறைந்தது 250 டொலரை வாங்குபவர்களுக்கான குலுக்கல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் பாலசுப்பிரமணியம் சிதம்பரமும் கலந்து கொண்டார்.
இதன்பிறகு தான் இவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அதாவது, நகைக்கடை குலுக்கல் போட்டியில் இவருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசு கிடைத்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.8 கோடி ஆகும்.
இதுகுறித்து பாலசுப்பிரமணியம் கூறுகையில், "இன்று என்னுடைய தந்தையின் 4 -வது நினைவு தினம். இதனால், இந்த பரிசை நான் அவரது ஆசீர்வாதமாக கருதுகிறேன்.
இந்த தகவலை எனது தாயாருக்கு தெரிவிப்பேன். மேலும், பரிசின் ஒரு பகுதியை நான் சிங்கப்பூரில் தங்கியிருந்த பகுதியின் மேம்பாட்டுக்காக தானமாக வழங்குவேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |