குப்பை தொட்டியில் கிடந்த லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க செயின்.., தூய்மை பணியாளர் செய்த நெகிழ்ச்சி செயல்
குப்பை தொட்டியில் கிடந்த லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க செயினை தூய்மை பணியாளர் ஒருவர் உரிமையாளரிடமே ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
குப்பை தொட்டியில் தங்க செயின்
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் உர்பசேர் நிறுவனம் சார்பில் பாலு என்பவர் தூய்மை பணியாளராக இருந்து வருகிறார். இவர் தினமும் பேட்டரி காரில் வந்து குப்பை தொட்டியில் உள்ள குப்பையை சேகரித்து செல்வார்.
அந்தவகையில் இன்று காலை சென்னை, அடையாரில் உள்ள பரமேஸ்வரி நகர் பகுதியில் குப்பைகளை சேகரிக்க சென்றுள்ளார்.
அங்கிருக்கும் குப்பை தொட்டியில் உள்ள குப்பைகளை தனித்தனியாக சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தங்க செயின் ஒன்று அதில் கிடந்துள்ளது.
அதனை பார்த்து தூய்மை பணியாளர் பாலு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், வீட்டில் உள்ள குப்பையுடன் சேர்த்து கொட்டிருக்கலாம் என்று நினைத்த பாலு, அருகில் உள்ள வீடுகளில் இது பற்றி கேட்டுள்ளார்.
அப்போது, அடையாறு பரமேஸ்வரி நகரில் வசித்து வரும் காமாட்சி சந்தானம் என்பவரின் தங்க செயின் என்பது தெரியவந்துள்ளது. அவர் தான், தெரியாமல் குப்பையுடன் சேர்த்து தங்க செயினையும் கொட்டியுள்ளார்.
பின்னர், அந்த செயினை உரிமையாளரிடமே தூய்மை பணியாளர் ஒப்படைத்தார். இதன் மதிப்பு ரூ.1.65 லட்சமாகும்.
தங்கத்தின் மீது ஆசை கொள்ளாமல் திரும்ப ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |