தங்கம் பாயும் நதி இந்தியாவில் எங்கே உள்ளது தெரியுமா?
பண்டைய காலத்தில் இருந்த தங்கம் உலகளவில் மதிப்புமிக்க பொருளாக இருந்து வருகிறது. தற்போதும் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல பலனை வழங்குகிறது.
தங்க விலை அசுர வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், சாமானியர்களுக்கு தங்கம் வாங்குவது கனவாக மாறி வருகிறது.
சுபர்ணரேகா நதி
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஆறு ஒன்று தங்கம் பாயும் நதியாக கருதப்படுகிறது. இங்கு மக்கள் தங்க சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சுபர்ணரேகா என அழைக்கப்படும் இந்த நதியின் தோற்றம், ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமியில் அமைந்துள்ள நாக்டி கிராமத்தில் உள்ளது.
இந்த நதி ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா வழியாக 747 கி.மீ தூரம் பாய்ந்து, இறுதியில் விழுந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
சுபர்ணரேகா நதி கனிம வளம் மிக்க பாறைகள் வழியாகப் பாய்வதால், இந்தப் பாறைகளுக்கு எதிராக நதி நீர் உராய்ந்து சிறிய தங்கத் துகள்கள் வெளியிடப்படுகின்றன, பின்னர் அவை கரைந்து நீரோட்டத்துடன் நகர்வதாக புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுபர்ணம் என்றால் தங்கம், ரேகா என்றால் கோடு என பொருளாகும். இதனால் இது தங்கம் பாயும் நதி என அழைக்கப்படுகிறது.
அரசியை விட சிறிய அளவிலான 60 முதல் 80 தங்க உருண்டைகள், நாளொனொன்றுக்கு இந்த பகுதியில் கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் மாதம் ஒருவர் ரூ.5,000 முதல் ரூ.8000 வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |