ட்விட்டரில் பல வண்ணங்களில் Verified Tick அறிமுகம்! எலான் மஸ்க் புதிய தகவல்
ட்விட்டரில் இனி நீலம், சாம்பல் மற்றும் தங்கம் என வெவ்வேறு நிறங்களில் Verified Tick வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரின் புதிய முதலாளி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், இன்று தனது ட்வீட்டில், நிறுவனம் "Verified" அம்சத்தை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 2) அறிமுகப்படுத்தும் என தெரிவித்தார்.
மூன்று வெவ்வேறு நிறங்களில் Verified Tick
மேலும், கணக்குகளை வேறுபடுத்தும் வகையில் வெவ்வேறு நிறங்களில் Verified Tick வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
நிறுவங்களுக்கு தங்க (Gold) நிறத்திலும், அரசாங்க கணக்குகளுக்கு சாம்பல் (Grey) நிறத்திலும், தனிநபர்களுக்கு அவர்கள் பிரபலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீல (Blue) நிறத்தில் Verified Check வழங்கப்படும் என அவர் உறுதிசெய்துள்ளார்.
இது வேதனையாக இருக்கலாம் ஆனால் இது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
Sorry for the delay, we’re tentatively launching Verified on Friday next week.
— Elon Musk (@elonmusk) November 25, 2022
Gold check for companies, grey check for government, blue for individuals (celebrity or not) and all verified accounts will be manually authenticated before check activates.
Painful, but necessary.
நீண்ட விளக்கம் அடுத்த வாரம்
மேலும் தனது மற்றோரு ட்வீட்டில், சரிபார்க்கப்பட்ட அனைத்து தனிப்பட்ட மனிதர்களும் ஒரே Blue Check-ஐ கொண்டிருப்பார்கள் என்றும், ஒருவேளை தனிநபர்கள் அந்த அமைப்பால் சரிபார்க்கப்பட்டால், அவர்கள் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டும் இரண்டாம் சிறிய லோகோவைக் கொண்டிருப்பார்கள் என்று தெரிவித்தார்.
அடுத்த வாரம் இந்த Verified Check தொடர்பான பல சந்தகங்களுக்கு சரியான மற்றும் நீண்ட விளக்கம் அளிக்கப்படும் என்பதையும் அவர் தெரிவித்தார்.
All verified individual humans will have same blue check, as boundary of what constitutes “notable” is otherwise too subjective.
— Elon Musk (@elonmusk) November 25, 2022
Individuals can have secondary tiny logo showing they belong to an org if verified as such by that org.
Longer explanation next week.