துபாயில் இருந்து இந்தியாவுக்கு சட்டப்பூர்வமாக எவ்வளவு தங்கம் எடுத்துச் செல்லலாம்
துபாயில் தங்கத்தின் விலை மலிவானது என்பதால் பல இந்தியர்கள் அங்கு தங்கம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
1 கிலோ தங்கம்
துபாய் மாகாணம் பொதுவாகவே நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கி வருறது, அதாவது தங்கம் மற்றும் நகைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி இல்லை. அத்துடன் குறைந்த உற்பத்தி கட்டணங்களும் வசூலிக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (CBIC) நிர்ணயிக்கப்பட்ட கடுமையான விதிகளுக்கு உட்பட்டே இந்தியாவிற்குள் தங்கத்தை கொண்டு வர முடியும்.
CBIC வழிகாட்டுதல்களின்படி, ஆறு மாதங்களுக்கும் மேலாக தங்கியதன் பின்னர் துபாயிலிருந்து திரும்பும் இந்தியப் பயணிகள், உரிய சுங்க வரியைச் செலுத்தி 1 கிலோ தங்கத்தை எடுத்துச் செல்லலாம்.
எடுத்து வரப்படும் தங்கமானது நகைகள், கட்டிகள் அல்லது நாணயங்கள் வடிவில் இருக்க வேண்டும், மேலும் முறையான ஆவணங்களும் இருக்க வேண்டும். விலை, தூய்மை மற்றும் கொள்முதல் திகதி போன்றவை இந்திய விமான நிலையங்களில் சரிபார்ப்புக்காக வழங்கப்பட வேண்டும்.
அதிகபட்சமாக ரூ 50,000 மதிப்புள்ள 20 கிராம் தங்கத்திற்கு வரி விலக்கு உண்டு. 20 முதல் 50 கிராம் வரையில் 3 சதவிகித வரி செலுத்த வேண்டும். 50 முதல் 100 கிராம் வரையில் 6 சதவிகிதம், 100 கிராமுக்கும் அதிகமென்றால் 10 சதவிகித வரி செலுத்த நேரிடும்.
ஆனால் பெண்கள் ரூ 1 லட்சம் மதிப்புள்ள 40 கிராம் வரையிலான தங்கத்தை வரியின்றி எடுத்துச் செல்லலாம். பெண்களுக்கு மட்டும் 40 முதல் 100 கிராம் வரையில் 3 சதவிகித வரி செலுத்த வேண்டும்.
சட்ட நடவடிக்கை
100 முதல் 200 கிராம் வரையில் 6 சதவிகித வரியும், 200 கிராமுக்கும் அதிகம் என்றால் 10 சதவிகித வரியும் செலுத்த வேண்டும். இதில் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தை அணிந்திருக்கும் நகைகளுக்கு 38.50 சதவிகித சுங்க வரி செலுத்த வேண்டும்.
6 மாதத்தில் இருந்து 1 வயது வரை 13.7 சதவிகித வரி விதிக்கப்படும். துபாயில் ஆறு மாதங்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் பயணிகள், இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் தங்கத்திற்கு 12.5 சதவிகித சுங்க வரி விலக்கு மற்றும் 1.25 சதவிகித சமூக நல கூடுதல் வரி விலக்கையும் பெறலாம்.
எடுத்துச் செல்லப்படும் தங்கம் வரி இல்லாத வரம்பை மீறினால், பயணிகள் இந்திய விமான நிலையங்களில் அதை அறிவித்து தேவையான சுங்க வரியை செலுத்த வேண்டும்.
அதிகப்படியான தங்கத்தை அறிவிக்கத் தவறினால், 1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல், அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
ஆண்கள் 20 கிராம் வரை தங்கத்தை வரியின்றி எடுத்துச் செல்லலாம். பெண்கள் மற்றும் குழந்தைகள் 40 கிராம் வரை வரி இல்லாமல் கொண்டு வரலாம். துபாயில் 6 மாதங்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் பயணி ஒருவருக்கு சுங்க வரியில் சலுகைகள் அளிக்கப்படுகிறது. ஆனால் முறையான ஆவணங்கள் அவசியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |