இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்: 30 தொழிலாளர்கள் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்
Gold mine collapsed in central Africa 30 miners dead: மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தங்கச் சுரங்கம் செவ்வாய்க்கிழமையான நேற்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் பலர் இன்னும் சுரங்கத்துக்குள் சிக்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுரங்க இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்த நபர் ஒருவரின் தகவல்படி, நானா மாம்பெரே மாகாணத்தின் அப்பா பகுதியில் இந்த தங்கச் சுரங்கமானது இடிந்து விழுந்துள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்
இந்நிலையில் சுரங்க இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் அவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ காட்சிகள் அப்பகுதியில் ஏற்பட்டு வரும் குழப்பமான மீட்பு பணிகளை பதிவு செய்துள்ளன.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரசு செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா அனுதாபம் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் உதவியும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |