ரூ.50,000 -யை தொட்ட ஒரு சவரன் தங்க விலை! தொடர்ந்து ஏறுவதற்கு என்ன காரணம்?
வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு சவரன் தங்க விலை ரூ.50,000 தொட்ட நிலையில், அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் பல்வேறு வகையான உலோகங்கள் இருந்தாலும் இந்தியர்கள் பெரும்பாலும் விரும்புவது தங்க ஆபரணம் தான். குறிப்பாக ஒவ்வொரு இந்தியர்களின் வீடுகளிலும் பண்டிகை கொண்டாட்டங்களின் போது முக்கியமாக பார்க்கப்படுவது தங்கம் தான்.
அதுவும் ஒருவரின் பொருளாதார நிலையை தங்கத்தை வைத்து கூட மதிப்பிடப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி எடுக்கும் முடிவுகள், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள், பல்வேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்கள் ஆகியவற்றால் சமீபத்திய நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டே இருக்கிறது.
என்ன காரணம்?
தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், "அமெரிக்காவின் பொருளாதாரத்தை எதிர்க்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் டொலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கி குவிப்பது தான்" என்கிறார்கள்.
அதே போல இந்தியாவைப் பொறுத்தவரை டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்க விலை காரணமாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.3500 மேல் உயர்ந்திருக்கிறது. இந்நிலையிலை இன்று (மார்ச் 29) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,250 -க்கும், ஒரு சவரன் ரூ.50,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தங்கத்தின் தேவையால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை தொடும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைப்பதோடு, ஜி.எஸ்.டி. (GST) வரியை முழுமையாக ரத்து செய்தால் மட்டுமே நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் தங்க நகையை வாங்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |