Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தால் EMI செலுத்துபவர்களுக்கு என்ன தாக்கம் ஏற்படும்?
ரெப்போ வட்டி விகிதம் என்ன என்பது பற்றியும், அதனால் ஏற்படும் தாக்கத்தை பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate)
ரெப்போ வட்டி என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக நாம் ரிசர்வ் வங்கியின் (Reserve Bank) கடமைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ரூபாய் நோட்டுகளை வெளியிடுதல், அரசுக்கான வங்கியாக இருத்தல், வர்த்தக வங்கிகளின் பணம் கையிருப்பிற்கு பாதுகாப்பாக இருத்தல், நாட்டின் அந்நிய செலாவணியின் பாதுகாவலனாக இருத்தல் ஆகியவை ரிசர்வ் வங்கியின் கடமைகளாகும்.
அதுமட்டுமல்லாம், மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் போது ரிசர்வ் வங்கி தலையிட்டு நிதி உதவி செய்யலாம்.மேலும், Monetary Policy தொடர்பான முடிவுகளையும் எடுக்கலாம்.
இதற்காக, ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழுக் கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் போது ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate), ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் (Reverse Repo Rate) ஆகியவை குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.
Repo Rate என்பது ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டியாகும். Reverse Repo Rate என்பது வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டியாகும்.
வங்கிகளில் பணம் அதிகமாக இருக்கும் போது கடன் அதிகமாக வழங்கப்படும். இதனால் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். மேலும், மக்கள் அதிக பொருட்களை வாங்கும் போது பொருட்களின் விலையும் உயருகிறது. இது தான் பணவீக்கம் (Inflation) ஆகும்.
இதில் பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என்றால் மக்களின் பணப்புழக்கத்தை குறைக்க வேண்டும். இதனால், வங்கிகளில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், கடன் வாங்குபவர்கள் குறைய தொடங்குவார்கள்.
இதனால் மக்களிடம் பணப்புழக்கம் குறையும் போது பணவீக்கமும் குறையும். எனவே, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடிகிறது.
என்ன தாக்கம் ஏற்படும்?
இதர வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (Repo Rate ) உயர்த்தியதன் மூலம் வங்கிகள் வழங்கும் கடன்கள் உயரக்கூடும்.
இதனால், குறிப்பாக வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றின் வட்டி விகிதம் அதிகரிக்கும். இது கடன் வாங்குபவர்களின் மாத தவணைகளில் (EMI) நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது, ஏற்கனவே கடன் வாங்கி EMI செலுத்தி வருபவர்களுக்கும் பொருந்தும். அதாவது, கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும். அதேபோல, ரெப்போ வட்டி குறைந்தால் கடன் வட்டியும் குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |