உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம்! ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. ஷாக்கில் இல்லத்தரசிகள்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே வெடிக்கும் போர் பதற்றத்தில் தங்கம் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று காலை 6மணியளவில் தொடர்ந்து போர் நடத்தி வருகின்றது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் தலைதூக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கச்சா எண்ணெய், கோதுமை, தங்கம் விலை போன்றவை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது. அதுபோல பங்கு சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றது.
அந்தவகையில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். இதனால் தற்போது இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.108 உயர்ந்து சுமார் ரூ.4827க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ. 38616க்கு விற்பனையாகி வருகிறது.
24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 41,544 ஆக உயர்ந்துள்ளது. அது போல வெள்ளியின் விலை ரூ.1.90 உயர்ந்து ரூ.70.60க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 70,600 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.