1985-ல் 100 ரூபாய்க்கு தங்கத்தை வாங்கியிருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன?
கடந்த 40 ஆண்டுகளில் தங்கத்தின் விலை உயர்வு, இந்திய முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை வழங்கியுள்ளது.
1985-ல் 100 ரூபாய்க்கு தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், 2025 மார்ச் மாதத்திற்குள் அது 6,518 ரூபாயாக வளர்ந்திருக்கும் என WhiteOak Capital வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இதன் மூலம், தங்கம் வளர்ச்சி அடையக்கூடிய மற்றும் ஆபத்து குறைந்த சிறந்த சொத்தாக திகழ்ந்துள்ளது.

முக்கிய ஒப்பீடுகள்:
வங்கி டெப்பாசிட்
1985-ஆம் ஆண்டு வங்கியில் ரூ.100 டெப்பாசிட் செய்திருந்தால் இன்று அது வட்டியுடன் சேர்த்து ரூ.2,100 கிடைத்திருக்கும். ஆனால் அதன் பணவீக்கம் சரிசெய்யப்பட்ட மதிப்பு ரூ.1,478 ஆகும்.
BSE சென்செக்ஸ்
1995-ல் சென்செக்ஸில் ரூ.100 முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு ரூ.13,484. ஆனால் அந்தஸ்தை அதிகமான ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்திருக்கும்.
தங்கம்
ஆனால் தங்கம் சந்தை வீழ்ச்சிக் காலங்களில் பாதுகாப்பான சொத்தாக செயல்பட்டது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, FY2012-ல் சென்செக்ஸ் -9.2 சதவீதம் வீழ்ந்தபோது, தங்கம் +32.9 சதவீதம் உயர்ந்தது. FY2020-ல் பங்குகள் –22.9 சதவீதம் குறைந்தபோது, தங்கம் +29.7 சதவீதம் உயர்ந்தது.
CAGR (Compound Annual Growth Rate):
1985–1995: 11 சதவீதம் வளர்ச்சி
2005–2015: 14.3 சதவீதம் வளர்ச்சி
2015–2025: 12.9 சதவீதம் வளர்ச்சி
இதனால், தங்கம் நீண்டகால முதலீட்டில் நிலைத்தன்மையும், போட்டித்திறனும் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது MCX-ல் பிப்ரவரி தங்க ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ.1,35,150 என்ற புதிய உச்சத்திற்கு அருகில் விற்பனையாகின்றன. உலகளாவிய பொருளாதார அசாதாரண நிலை, அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பு ஆகியவை தங்க விலையை மேலும் ஆதரிக்கின்றன.
இதனால், தங்கம் இந்திய முதலீட்டாளர்களுக்கு வளர்ச்சி, பாதுகாப்பு ஆகிய இரண்டையும் வழங்கும் முக்கிய சொத்து வகை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Gold investment returns India 1985-2025, Rs 100 gold vs Sensex vs bank deposits, WhiteOak Capital gold CAGR analysis, MCX gold price record high December 2025, Safe haven asset gold inflation hedge, Gold vs equities volatility comparison, Long-term gold compounding returns India, Gold outperforming bank FDs and inflation, Gold price trend 40 years India market, Gold vs Sensex wealth creation study