தங்க நகரம் உப்பு ஏரியாக மாறிய அதிர்ச்சி.., அன்னையின் சாபத்தால் ஏற்பட்ட மாற்றம்
மக்களின் பேராசை காரணமாக அன்னையின் சாபத்தால் தங்கமாக இருந்த நகரம் உப்பு ஏரியாக மாறிய சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அன்னையின் சாபம்
இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் சாம்பார் ஏரி உள்ளது. இந்த ஏரியானது சுற்றுலா மற்றும் உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்றது.
மேலும், இந்த ஏரிக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இது, வெளிநாட்டு பறவைகளின் புகலிடம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஏரியின் கட்டுமான கதை தொடர்பாக ஒரு புராண கதை இருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். அதாவது, ஷாகம்பரி அன்னையின் சாபத்தால் தான் சாம்பார் ஏரி உருவானது என்று சொல்கிறார்கள்.
இந்த சாம்பார் ஏரிக்கு மறுபுறத்தில் 50 மீட்டர் தொலைவில், தேவயானி சரோவரில் சுவையான நீர் கொண்ட ஏரி உள்ளது. இதனால், இந்த இரண்டு எரிக்கும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இந்த உப்பு ஏரி குறித்து தேவயானி தீர்த்த சரோவரின் தலைமை அர்ச்சகர் ஹரிபிரசாத் சர்மா கூறுகையில், "இந்த கோவிலானது சவுகான் வம்சத்தின் ஆட்சியாளரான வாசுதேவ் என்பவரால் நிறுவப்பட்டது.
இந்த அன்னையின் ஆசி இல்லாமல் சாம்பாரில் நடைபெறும் எந்த பூஜையும் முழுமையடையாது என்று மக்கள் நம்புகின்றனர்.
புராணங்களின் படி, மக்களின் பக்தியால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் சாம்பார் பகுதியின் பெரும்பகுதியை தங்கம் மற்றும் வெள்ளியாக அன்னை மாற்றினார் என்று சொல்கிறார்கள்.
இதனால், இதனை எடுப்பதற்கு மக்களிடையே பேராசை அதிகரித்து சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்கவே, அன்னை தனது மகிமையால் அதை உப்பாக மாற்றினார். இதனால் தான் சாம்பார் ஏரி பிறந்ததாக கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |