மெஸ்ஸி இதுவரை வென்றிடாத ஒரே ஒரு மதிப்புமிக்க விருது., 20 பேர் மட்டுமே அதை வென்றுள்ளனர்
அர்ஜென்டினாவுக்கு உலக்கோப்பையை வென்று கொடுத்த லியோனல் மெஸ்ஸியின் சேகரிப்பில் இன்னும் இந்த ஒரு மதிப்புமிக்க விருது மட்டும் இடம்பெறவில்லை.
அந்த விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட இதுவரை 20 வீரர்கள் மட்டுமே வென்றுள்ளனர்.
2022-ஆம் ஆண்டிற்கான கோல்டன் ஃபூட் (Golden Foot) விருதை போலந்து நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி (Robert Lewandowski) வென்றார்.
இந்த கோல்டன் ஃபூட் விருது தான் லியோனல் மெஸ்சி இதுவரை வென்றிராத ஒரு விருது.
FIFA/Getty Images
லியோனல் மெஸ்ஸி
மெஸ்ஸி இன்னும் தனது நாட்டின் நம்பமுடியாத உலகக் கோப்பை வெற்றியை தனது அர்ஜென்டினா அணி வீரர்களுடன் கொண்டாடி வருவதால், இந்த விருதை தவறவிட்டதற்காக அவர் கவலைப்படாமல் இருக்கலாம்.
கால்பந்தில் அவர் பல, பல சாதனைகள் செய்த போதிலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்லாடன் இப்ராஹிமோவிக் மற்றும் ரொனால்டினோ போன்ற சில நட்சத்திர வீரர்கள் வென்ற இந்த ஐரோப்பிய விருதை வென்றதில்லை.
இதையும் படிங்க: 10,000 கோடி தர தயார்! உலகக்கோப்பையில் கோல்டன் பூட் வென்ற எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய துடிக்கும் ரியல் மாட்ரிட்
கோல்டன் ஃபூட்
கோல்டன் ஃபூட் 20 ஆண்டுகளாக உள்ளது, முந்தைய வெற்றியாளர்களின் பட்டியலில் கால்பந்து ஜாம்பவான்களின் முழு பட்டியலையும் உள்ளடக்கியுள்ளது, ஆனால் பட்டியலில் மெஸ்ஸி என்ற ஒரு பெயர் மட்டுமே இல்லை.
Credit: Antonio Caliendo/Golden Foot
விருதை வெல்ல, 28 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், மேலும் இது ஒரு முறை மட்டுமே வெல்லக்கூடிய விருது.
பத்திரிக்கையாளர்களால் வாக்களிக்கப்பட்ட காலண்டர் ஆண்டில் சிறந்த வீரருக்கு இது வழங்கப்படுகிறது, மேலும் மெஸ்ஸி வெற்றி பெறாமல் ஏழு ஆண்டுகளாக தகுதி பெற்றுள்ளார்.