எகிப்திய மம்மிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வியப்பூட்டும் புதியதொரு விடயம்
எகிப்திய பிரமிடுகளே இன்னமும் பலருக்கு ஆச்சரியப்படுத்தும் விடயமாக உள்ள நிலையில், சமீபத்தில் அந்த பிரமிடுகளில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு புதிய விடயம் மேலும் சுவாரஸ்யத்தை உருவாக்கியுள்ளது.
எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வியப்பூட்டும் விடயம்
எகிப்து ராஜகுடும்பத்தினர் மரணமடையும்போது அவர்களுடைய உடல்களை பதப்படுத்தி அவற்றை பிரமிடுகளில் பாதுகாப்பது பண்டை காலங்களில் வழக்கமாக இருந்துவந்துள்ளது.

அந்த பதப்படுத்தப்பட்ட உடல்களை மம்மிகள் என்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் ஒரு விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆம், அந்த மம்மிகளின் வாய்க்குள் தங்கத்தால் ஆன நாக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோமர் கால மம்மிகளில் இந்த தங்க நாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த தங்க நாக்குகள், அந்த கால மக்களுடைய இறப்புக்குப் பின்னான வாழ்வுக்கான ஒரு சடங்கு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதாவது, இறந்தவர்கள் அவர்களுடைய கடவுள்களுடன் பேசுவதற்காக அவர்களுக்கு இந்த தங்க நாக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த அரிய கண்டுபிடிப்பு, எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு 120 மைல்கள் தெற்கே அமைந்துள்ள Minya என்னுமிடத்திலுள்ள Al-Bahnasa என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |