பிரபல நடிகையை ஸ்கூட்டர் ஏற்றி கொன்ற இளைஞர் கைது!
அமெரிக்காவில் பிரபல நடிகை லிசா பேன்ஸை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரை பொலிஸார் கைது செய்தனர்.
ஹாலிவுட்டில் Gone Girl, Cocktail உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை லிசா பேன்ஸ் (Lisa Banes). 65 வயதான இவர் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தோலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் லிசா, கடந்த ஜூன் மாதம் 4-ஆம் திகதி நியூயார்க்கில் சாலையை கடக்கும்போது, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் அவரை இடித்து தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தலையில் பலமாக அடிபட்டதால் மூலையில் பாதிப்பு அடைந்த லிசா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி ஜூன் 14-ஆம் திகதி உயிரிழந்தார்.
போக்குவரத்து விதிகளை மீறி விபத்தை ஏற்படுத்தி, லிசாவின் மரணத்திற்கு காரணமானவரை NYPD பொலிஸார் கடந்த 2 மாதங்களாக தேடிவந்தனர்.
இந்நிலையில், இன்று காலை குற்றவாளியை கைது செய்துவிட்டதாக NYPD பொலிஸார் அறிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் மான்ஹாட்டனை சேர்ந்த பிரையன் பாய்ட் (Brian Boyd), வயது 26 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
