போத்தல்களை வீசி தாக்கிய ரசிகர்கள்; பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட கால்பந்து வீரர்
gonzalo montiel escorted off by security after red card:ரசிகர்கள் போத்தல்களை வீசி தாக்கியதால், கால்பந்து வீரர் கோன்சாலோ மான்டியலை கலவரத் தடுப்புக் கேடயங்கள் பயன்படுத்தி பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர்.
கால்பந்து வீரர் மீது போத்தல்களை வீசி தாக்கிய ரசிகர்கள்
அர்ஜென்டினா அணிகளான போகா ஜூனியர்ஸ் மற்றும் ரிவர் பிளேட் இடையேயான சூப்பர்கிளாசிகோ போட்டி இன்று நடைபெற்றது.
ஆட்டத்தின் 2வது பாதியில், ரிவர் பிளேட் வீரர் கோன்சாலோ மான்டியல் (gonzalo montiel), சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அப்போது மைதானத்தின் ஓரத்தில் நடந்து சென்ற அவர், தன்னைத்தானே சுட்டிக்காட்டியும், தனது சட்டையில் இருந்த ரிவர் பிளேட் சின்னத்தைக் காட்டியும், ஆள்காட்டி விரலால் சுற்றும் சைகை காட்டியும் ரசிகர்களை கேலி செய்தார்.
Gonzalo Montiel moet na rode kaart onder politiebegeleiding het veld af in de Superclásico 🟥🇦🇷 https://t.co/zSeGy22f0u
— ESPN NL (@ESPNnl) November 2, 2026
இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த ரசிகர்கள், தங்களிடமிருந்த போத்தல்களை அவர் மீது வீசினர்.

இதனையடுத்து கலவரத் தடுப்பு உடைகள் அணிந்திருந்த 2 பாதுகாப்பு ஊழியர்கள் மான்டியலை மைதானத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பீர் போத்தல்கள் உட்பட வீசப்பட்ட பல்வேறு பொருட்களிலிருந்து அவரைப் பாதுகாக்க, அவர்களுடைய கலவரத் தடுப்புக் கேடயங்கள் பயன்படுத்தப்பட்டன.