உங்களுக்கு கசப்பு பிடிக்காதா? கொரோனா தொடர்பில் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
பாகற்காயை நாக்கில் அருகில் கொண்டு செல்வதற்கு முன்னே அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறீர்களா? உங்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் குறைவு என்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள்.
ஒயின், பிரக்கோலி, செலரி, grapefruit அல்லது Brussels முதலான சுவைகளை அதிகம் உணருவோருக்கு கொரோனா தொற்றும் அபாயம் குறைவாம். இவர்கள் 'supertasters' என்று அழைக்கப்படுகிறார்கள்.
அவர்களது நாவில் அதிக எண்ணிக்கையிலான சுவை அறியும் சுவை மொட்டுக்களும் மூக்கில் வாசனை அறியும் செல்களும் இருப்பதால் இயற்கையாகவே அவர்களால் நோய்த்தொற்றை சமாளிக்க முடியுமாம்.
Louisianaவைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று, இந்த 'supertasters' மீது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், அவர்களில் ஒருவர் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் 10 மடங்கு குறைவு என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
இன்னொரு மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், குழந்தைகள், குறிப்பாக கசப்பை
வெறுக்கும் குழந்தைகளுக்கு பூஜ்ய சதவிகிதம்தான் கொரோனா தொற்றும் வாய்ப்பு
உள்ளது, அதாவது கொரோனா தொற்றும் வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்
அந்த ஆய்வாளர்கள்.