மின்கட்டணம் தொடர்பில் பிரான்ஸ் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி
பிரான்ஸ் குடிமக்களுக்கு மின்கட்டணம் தொடர்பில் ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
உயர்ந்த மின்கட்டணம்
2021ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆற்றல் நெருக்கடி மற்றும் 2022இல் உக்ரைன் போர் ஆகிய காரணங்களால் பிரான்சில் மின்கட்டணம் உயர்ந்தது.
ஆகவே, மின்கட்டண உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக 2022ஆம் ஆண்டு மக்களை பாதுகாக்கும் கட்டுப்பாடு ஒன்றைக் கொண்டுவந்தது.
குறையும் மின்கட்டணம்
அந்த கட்டுப்பாடு, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
அதாவது, மின்கட்டணம் கைமீறிப்போகாமல் தடுப்பதற்காக, மக்களுக்கு உதவியாக பிரான்ஸ் அரசு கொண்டு வந்த கட்டுப்பாடு பிப்ரவரி 1ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
என்றாலும், அதையும் தாண்டி மின்கட்டணம் குறைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி மின்கட்டணம் குறைய முக்கியமான காரணம், மின்சாரத்தின் சந்தை விலை குறைந்துள்ளதுதான்.
அத்துடன், பிரான்ஸ் அணுமின்சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதும் மின்கட்டணம் குறைய காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |