ரூ 75,000 வரையில்... வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான சுங்க விதிகளை அரசாங்கம் திருத்தம் செய்துள்ளது.
நடைமுறைக்கு
இதனால், இந்தியக் குடிமக்களுக்கான வரி விலக்கு வரம்பு தற்போது 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நகைகளைக் கொண்டு வருவதற்கான விதிகள் தற்போது அதன் மதிப்பின் அடிப்படையில் இல்லாமல், எடையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தின் இந்த முடிவு, விமான நிலையங்களில் சுங்க அனுமதி செயல்முறையை வேகமாகவும் எளிதாகவும் மாற்றும் என்றே கூறப்படுகிறது.
அத்துடன், ஆவண வேலைகளைக் குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் திதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. விமானம் அல்லது கடல் வழியாக வரும் பயணிகளுக்காக வெவ்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வரி வரம்பு 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தரைவழி மார்க்கமாக இந்தியாவுக்கு வந்தால், எந்தவொரு குடிமகனுக்கும் பொதுவான வரி விலக்கு சலுகை கிடைக்காது.
இந்தியாவில் வசிப்பவர்கள் 75,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வரி செலுத்தாமல் கொண்டு வரலாம்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த வரம்பு 75,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
40 கிராம் வரை வரி
சுற்றுலா அல்லாத விசாவில் வரும் வெளிநாட்டு குடிமக்களுக்கு ரூ. 75,000 வரை விலக்கு அளிக்கப்படும், அதே சமயம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை விலக்கு அளிக்கப்படும்.
ஆபரணங்களைப் பொறுத்தவரை, விதிகள் எளிதாக்கப்பட்டுள்ளன. வரி மதிப்பிற்குப் பதிலாக எடையின் அடிப்படையில் விதிக்கப்படும். ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து வருபவர்களுக்கு இந்த விலக்கு கிடைக்கும்.

பெண் பயணிகள் 40 கிராம் வரை வரி இல்லாத நகைகளைக் கொண்டு வரலாம், மற்ற பயணிகளுக்கு 20 கிராம் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பயணியும் சுங்க வரி செலுத்தாமல் ஒரு மடிக்கணினியைத் தங்களுடன் கொண்டு வரலாம். இரண்டு மடிக்கணினியைக் கொண்டு வருவதற்கு, நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட சுங்க வரியைச் செலுத்த வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |