இந்தியாவில் 82,000 கோடி முதலீடு- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
இந்தியாவுக்கான எண்மயமாக்கல் நிதியின் கீழ் 10 பில்லியன் டொலர்களை (இந்திய மதிப்பில் ரூ.82,000 கோடி) செய்து வருவதாக சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்க பயணத்தின் போது பிரதமரை சந்தித்தது பெருமைக்குரிய ஒன்றாகும்.
கடந்த டிசம்பரில் இருவரும் சந்தித்தோம், தற்போது அதுதொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்தது, இந்தியாவுக்காக எண்மயமாக்கல் நிதியின் கீழ் 10 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வது வருவது குறித்து பிரதமரிடம் தெரிவித்தேன்.
குஜராத்தில் கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய நிதிசார் செயல்பாட்டு மையம் திறக்கப்படவுள்ளது, இது இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவில் சிறிய, பெரிய வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த 7 ஆண்டுகளில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.1.23 லட்சம் கோடியை முதலீடு செய்யும் என தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்துள்ளதுடன்,
2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி சிறுவணிகங்களை டிஜிட்டல்மயமாக்கவும், 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளதாக குறிப்பிடத்துள்ளது நினைக்கூரத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |