பிளே-ஸ்டோரில் உள்ள அனைத்து ஆப்களுக்கும் தடை: கூகுள் நிறுவனம் அதிரடி!
பிளே ஸ்டோரில் இருந்து கால் ரெக்கார்டிங் ஆப்கள் விரைவில் தடைச் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்த நிலையில் அதனை தற்போது கூகுள் நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.
கூகுள் பயனாளர்களின் தனியுரிமைகளில் இந்த கால் ரெக்கார்டிங் ஆப்கள் தலையிடுவதாக தெரிவித்து, கால் ரெக்கார்டிங் சேவைகள் மற்றும் ஆப்களுக்கு எதிரான கருத்தை பல ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் முன்வைத்து வந்தனர்.
இந்தநிலையில், மே 11ம் திகதி முதல் அனைத்து கால் ரெக்கார்டிங் ஆப்களையும் கூகுள் நிறுவனம் தடை செய்துள்ளது, ஆனால் பயனாளர்களின் ஃபோனில் இன்-பில்ட் வசதியாக இருக்கும் ரெக்கார்டிங் வசதிகள் எந்த தடையும் இன்றி செயல்படும் என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கால் ரெக்கார்டிங் வசதிகளை தடை செய்யும் தொழில்நுட்பத்தை ஆண்ட்ராய்டு 6 மற்றும் ஆண்டிராய்டு 10 ஆகிய ஃபோன்களில் கூகுள் பயன்படுத்தினாலும், தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்தி சில ஆப்கள் கால் ரெக்கார்டிங் வசதிகளை வழங்கி வந்தன.
இத்தகைய சூழலில் பிளே ஸ்டோரில் உள்ள அனைத்து கால் ரெக்கார்டிங் ஆப்களுக்கும் கூகுள் நிறுவனம் தடை செய்துள்ளது.
இதுத் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ட்ரூ காலர் தெரிவித்த கருத்தில், “கூகுள் நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட டெவலப்பர் புரோகிரோம் கொள்கைகளின்படி, கால் ரெக்கார்டிங் வசதியை வாடிக்கையாளர்களுக்கு இனி தொடர்ந்து எங்களால் வழங்க முடியாது.
ஆனால் பயனாளர்கள் பயன்படுத்தும் போன்களில் கால் ரெக்கார்டிங் ஏற்கனவே இருந்தால், அவர்களுக்கு எந்தவித தடையும் இருக்காது.
கூடுதல் செய்திகளுக்கு: பார்ட்டிகேட் விசாரணை...மன்னிப்பு கேட்க மறுத்த போரிஸ் ஜான்சன்
முன்னதாக, பயனாளர்களின் கோரிக்கை அடிப்படையிலேயே அனைத்து ஆண்டிராய்டு யூசர்களுக்கும் கால் ரெக்கார்டிங் வசதியை நாங்கள் வழங்கி வந்தோம் எனவும் ட்ரூ காலர் தெரிவித்துள்ளார்.