தீபாவளியன்று கூகுளில் அதிகம் பார்க்கப்பட்ட 5 விடயங்கள்! சுந்தர் பிச்சை வெளியிட்ட தகவல்
தீபாவளியன்று கூகுளில் அதிகம் பார்க்கப்படுவது எது? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இதற்கு பதில் அளித்துள்ளார்.
தீபாவளியன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தேடிய ஐந்து விடயங்களை சுந்தர் பிச்சை தனது twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ளவர்களால் தேடப்பட்ட 'ஏன்' (Why) என்று தொடங்கும் அந்தக் கேள்விகள் இதோ.
1. இந்தியர்கள் ஏன் தீபாவளி கொண்டாடுகிறார்கள்? (Why Indians celebrate Diwali)
2. தீபாவளி அன்று ரங்கோலி ஏன் போடப்படுகிறது? (Why do we do rangoli on Diwali)
3. தீபாவளி அன்று தீபம் ஏற்றுவது ஏன்? (Why do we light lamps on Diwali)
4. தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வது ஏன்? (Why is Lakshmi puja done on Diwali)
5. தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்? (Why oil bath on Diwali)
தீபாவளியன்று புகைப்படக் கலைஞர் மதன் மோகன் ராம் எடுத்த படங்களைப் பகிர்ந்து நுகர்வோர் முன் இந்தக் கேள்விகளைப் பகிர்ந்துள்ளார் சுந்தர் பிச்சை.
Happy Diwali to all who celebrate! We’re seeing lots of interest about Diwali traditions on Search, here are a few of the top trending “why” questions worldwide: https://t.co/6ALN4CvVwb pic.twitter.com/54VNnF8GqO
— Sundar Pichai (@sundarpichai) November 12, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
5 questions shared by Sundar Pichai, Google CEO Sundar Pichai Diwali Wishes, 5 most-searched questions on Google about Diwali