ஒரே நேரத்தில் 20 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சுந்தர் பிச்சை., GoogleCEO அவற்றை என்ன செய்வார்?
சுந்தர் பிச்சை பொதுவாக ஒருவர் ஒன்று அல்லது இரண்டு மொபைல்களைப் பயன்படுத்துவார் என கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், தொழில்நுட்ப ஜாம்பவானான Google நிறுவனத்தின் CEO-வாக சுந்தர் பிச்சை இரண்டல்ல, மூன்றல்ல, 20 ஸ்மார்ட்போன்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துகிறார்.
இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் ஏன் இத்தனை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
அந்த வெவ்வேறு சாதனங்களில் கூகுள் தயாரிப்புகளின் செயல்திறனை சுந்தர் பிச்சை சோதித்து பார்க்கிறார்.
அதற்காக சந்தையில் புதிதாக வந்த 20 ஸ்மார்ட் மொபைல்களை வாங்கி, அந்த சாதனங்களில் கூகுள் ஆப்ஸ் மற்றும் தயாரிப்புகள் எப்படி வேலை செய்கின்றன? ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என்பதை கண்டுபிடித்து தருவதாக கூறினார்.
கடவுச்சொற்களை அடிக்கடி மாற்றும்போது அவற்றை நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதாகவும்.. அதனால் Two-Factor Authenticationஐ பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றும் சுந்தர் பிச்சை கூறினார்.
டிஜிட்டல் உலகில் நுகர்வோர் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தினமும் காலையில் Techmeme என்ற இணையதளத்தை பார்வையிடுவதாக கூகுள் சிஇஓ தெரிவித்தார். அதன் அப்டேட்களை தொடர்ந்து படிப்பேன் என்றார்.
தொழில்நுட்ப துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல இணையதளம். தற்போது இணையதள தேடுதல் முறை நாளுக்கு நாள் மாறி வருகிறது என்றார்.
Gemini விரைவில் AI சாட்போட்டைக் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.
இதன்போது குழந்தைகளின் போன் ஸ்க்ரீன் டைம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், குழந்தைகளின் போன் பழக்கம் மற்றும் ஸ்க்ரீன் டைம் குறித்து பெற்றோர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப அறிவு முக்கியம், ஆனால் அதற்கான நேரத்தை தீர்மானிப்பதும் மிக முக்கியம் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indian Google CEO, Sundar Pichai, Tamilian Sundar Pichai, Sundar Pichai Smart phones