ட்ரம்ப்பின் அறிவிப்பால் கூகுள் எடுத்த முடிவு! உடனுக்குடன் அதிரடி மாற்றம்
கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்ற கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடி முடிவுகள்
டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் எடுத்த அதிரடி முடிவுகளால் சர்வதேச அளவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
கிரீன்லாந்தை கைப்பற்றும் முயற்சியில் உள்ள ட்ரம்ப், மூன்றாம் பாலினத்தவருக்கு அமெரிக்க ராணுவத்தில் சேர தடை என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல், அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வரும் ட்ரம்ப், அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அமெரிக்கா வளைகுடா
இந்த நிலையில், ட்ரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை, அமெரிக்கா வளைகுடா என மாற்றம் செய்ய கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக முதற்கட்டமாக, கூகுள் மேப் செயலில் இப்பெயர் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்காவில் உள்ள கூகுள் பயனாளர்களுக்கு மட்டுமே இந்த பெயர் மாற்றம் என்றும், மெக்சிகோவில் உள்ளவர்களுக்கோ "மெக்சிகோ வளைகுடா" என்ற பெயரிலேயே கூகுள் மேப் செயலியில் தென்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் பிற நாட்டவர்களுக்கு இரு பெயர்களும் காட்டும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |