சுந்தர் பிச்சையை விட பணக்கார Google ஊழியர்., சொத்து மதிப்பு ரூ. 15000 கோடி.. யார் அவர்?
Alphabet மற்றும் அதன் துணை நிறுவனமான Googleன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை.
உலக நிறுவனங்களின் சிறந்த, அதிக சம்பளம் வாங்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகளைக் குறிப்பிடும் போதெல்லாம் சுந்தர் பிச்சையின் பெயர் முன்னுக்கு வரும்.
ஆனால் ஒரு கூகுள் ஊழியர் சுந்தர் பிச்சையை விட பணக்காரர் என்பது உங்களுக்கு தெரியுமா?
2022-ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் சம்பளம் 226 மில்லியன் டொலர்கள் மற்றும் அந்த ஆண்டிற்கான அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 10215 கோடிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Google Cloud CEO தாமஸ் குரியன்
ஆனால் Google Cloud பிரிவின் தலைமை நிர்வாக திகாரி Thomas Kurian-ன் சொத்து மதிப்பு ரூ.15000 கோடிக்கு மேல்.
தாமஸ் குரியன் ஜார்ஜ் குரியனின் இரட்டை சகோதரர் ஆவார், அவர் 2015 முதல் NetAppன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
1966ஆம் ஆண்டு கேரளாவின் கோட்டயத்தில் பிறந்த இருவரும் பெங்களூருவில் தங்கள் பள்ளி வாழ்க்கையை கழித்தனர். பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, இருவரும் IIT Madrasல் சேர்ந்தனர், ஆனால் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டனர்.
பின்னர் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகு, தாமஸ் குரியன் உலகின் சிறந்த இந்திய நிர்வாகிகளில் ஒருவரானார். 2018-ல், அவர் Google Cloudன் CEO ஆனார்.
தாமஸ் குரியன் கூகுள் கிளவுட்டை புதுப்பித்த பெருமைக்குரியவர். நிறுவனத்தின் உத்தியை மாற்றி வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்தினார். இதன் மூலம் கூகுள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர் என்ற பெருமையை தாமஸ் குரியன் பெற்றார்.
மேலும், இந்த மலையாளி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உலகின் இரண்டாவது பணக்கார தலைமை நிர்வாக அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Who is Thomas Kurian, Google Cloud CEO Thomas Kurian, Google CEO Sundar Pichai Net Worth, Thomas Kurian Net Worth, Indian Origin CEO Thomas Kurian, Thomas Kurian Sundar Pichai, Malayali CEO