Google ஊழியர் 35 வயதிற்குள் ரூ.41 கோடி ஈட்ட இலக்கு! இதை தான் பின்பற்றுகிறார்
கலிபோர்னியாவைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் ஊழியரான ஒருவர் 35 வயதிற்குள் ரூ.41 கோடி சம்பளத்தை ஈட்டியுள்ளார். அதற்கான தொகுப்பை தான் பார்க்க போகிறோம்.
கூகுள் ஊழியர்
கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியில் வசிக்கும் இளம் தொழில்நுட்ப வல்லுநரான ஈதன் நகுன்லி (22) தனது கணினி அறிவியல் பட்டப்படிப்பை இரண்டே ஆண்டுகளில் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.
பின்பு, இளங்கலை படிப்பை முடித்தவுடன் தன்னுடைய வாடகை பணத்தை மிச்சப்படுத்த குடும்பத்துடன் தங்கி வேலை தேட ஆரம்பித்தார். பிறகு, தகவல் மற்றும் தரவு அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் போதே மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது, தன்னுடைய முதுகலை பட்டப்படிப்பை முடிப்பதற்குள் கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். அந்த சமயத்தில் இவரது ஆண்டு வருமானம் 1,94,000 டொலர் (ரூ.1.60 கோடி) ஆகும்.
முதலீடு தான் முக்கிய நோக்கம்
தற்போது, பெரும்பாலான இளைஞர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்காகாக பணத்தை சேமித்து வைத்து முதலீடு செய்ய நினைக்கிறார்கள்.
அந்தவகையில் நகுன்லி என்ற இளைஞர் 35 வயதிற்குள் 5 மில்லியன் டொலர் (சுமார் 41 கோடி ரூபாய்) சம்பளத்தை பெற்று விரைவில் ஓய்வு பெற இருப்பதாக கூறினார். இது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இது தொடர்பாக நகுன்லி கூறுகையில், பணத்தை சேமிப்பதை விட பங்குகளில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை நான் அறிந்தேன். என் பெற்றோர்கள் எனக்கு முதலீடு பற்றி கூறினார்கள். பணத்தை வெறும் சேமிப்பாக வைத்தால் அது பயனற்றதாகிவிடும். அதனால், முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறினார்கள்.
தற்போது இவர், தனது ஓய்வூதியம் மற்றும் பிற முதலீட்டுக் கணக்குகள், புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் உள்ள வீடுகளில் 135,000 டொலர் (ரூ.1.1 கோடி) முதலீடு செய்துள்ளார்.
மேலும், தனது ஊதியத்தில் இருந்து 35% முதலீடு செய்து வருகிறார். எதிர்காலத்தில் இவர் ரியல் எஸ்டேட் தொழிலையும் விரிவுபடுத்த உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |