ஒரு வாட்ஸ்அப் குழுவை பல கோடி மதிப்பு நிறுவனமாக மாற்றிய இளைஞர்: முதலீடு செய்த முகேஷ் அம்பானி
வெறும் வாட்ஸ்அப் குழுவாக தொடங்கப்பட்ட ஒரு முயற்சி பல கோடிகள் மதிப்பிலான நிறுவனமாக மாறியதுடன், தற்போது ஆசியாவின் பெரும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியே அந்த நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி தமது சில்லறை வர்த்தக நிறுவனம் ஊடாக வளர்ந்துவரும் டசின் கணக்கான சிறு நிறுவனங்களை வாங்கவும் அல்லது முதலீடும் செய்து வருகிறார்.
முகேஷ் அம்பானி முதலீடு செய்துள்ள அப்படியான ஒரு நிறுவனம் தான் Dunzo. பொறியியல் பட்டதாரியான Kabeer Biswas என்பவரால் 2014ல் துவங்கப்பட்டது.
Dunzo செயலி ஊடாக அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் மற்றும் பிற பொருட்களை வாடிக்கையாளர்கள் சில நிமிடங்களில் தங்கள் வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.
பொறியியல் மற்றும் MBA பட்டதாரியான கபீர் பிஸ்வாஸ் 2014ல் தொழில் தொடங்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். Hoppr என்ற ஒரு சிறு நிறுவனத்தை துவங்கிய நிலையில், Hike என்ற நிறுவனம் அதை இவரிடம் இருந்து வாங்கியுள்ளது.
Dunzo என்ற நிறுவனம்
அதில் இருந்து கிடைத்த முதலீடும் நம்பிக்கையும் Dunzo என்ற பெரும் நிறுவனத்தை துவங்க தூண்டுதலாக அமைந்துள்ளது. தமக்கு அறிமுகமான மூவருடன் இணைந்து கபீர் பிஸ்வாஸ் Dunzo நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
துவக்கத்தில் வெறும் ஒரு வாட்ஸ்அப் குழுவாகவே செயல்பட்டு வந்துள்ளது. நண்பர்கள், சுற்றுவட்டார மக்கள் என தங்கள் தேவைகளை அந்த வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்து வந்துள்ளனர்.
உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக, மொபைல் செயலி ஒன்றை உருவாக்க திட்டமிட்டு, முதலீடுகளை நாடியுள்ளனர். மிக விரைவிலேயே Dunzo நிறுவனத்தின் செயல்பாடு முகேஷ் அம்பானிக்கு பிடித்துபோக, அவரது ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் 1988 கோடி தொகையை Dunzo-வில் முதலீடு செய்தது.
இதனையடுத்து Dunzo நிறுவனத்தின் மதிப்பு அதிரடியாக உயர்ந்து தற்போது 6400 கோடி என பதிவாகியுள்ளது. வெறும் வாட்ஸ்அப் குழுவாக தொடங்கப்பட்ட ஒரு முயற்சி தற்போது பல கோடிகள் மதிப்பிலான நிறுவனமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |