கூகுள் மீது விசாரணைக்கு உத்தரவு: வின்ஸோவின் புகாரை தொடர்ந்து CCI நடவடிக்கை
பிரபல கேமிங் நிறுவனமான வின்ஸோவின் புகாரைத் தொடர்ந்து கூகுள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூகுள் மீது புகார்
பிரபல கேமிங் நிறுவனமான வின்ஸோ(Winzo) அளித்த புகாரின் அடிப்படையில், கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI)) உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் கேமிங் துறையில் நம்பகத்தன்மை விதியை மீறியதாக கூகுள் மீது வின்ஸோ குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, கூகுள் ப்ளே ஸ்டோரில் பட்டியலிடப்படும் பணம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டு செயலிகளில் வின்ஸோ செயலி கட்டுப்படுத்தப்படுவதாகவும், ஆண்ட்ராய்டு செல்போன்களில் வின்ஸோ செயலி குறித்து ஆதாரமற்ற எச்சரிக்கைகள் காட்டப்படுவதாகவும் வின்ஸோ புகார் அளித்துள்ளது.
இதனால், நிறுவனத்தின் நற்பெயர் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விசாரணை குழு அமைப்பு
இந்நிலையில் எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், சி.சி.ஐ. தலைவர் ரவ்னீத் கவுர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, கூகுள் நிறுவனத்திடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த குழு 60 நாட்களுக்குள் தனது விசாரணை அறிக்கையை சி.சி.ஐ.-க்கு சமர்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |