தமிழ்நாட்டில் Smartphone, Drone தயாரிக்கவுள்ள Google-Foxconn
கூகுள் நிறுவனம் தமிழகத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் ட்ரோன்களை தயாரிக்க உள்ளது.
Google நிறுவனம் தமிழகத்தில் பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தைவானிய நிறுவனமான Foxconn-உடன் இணைந்து Google Pixel போன்களை தமிழ்நாட்டில் அசெம்பிள் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கூகுளின் ஆளில்லா விமானங்களின் துணை நிறுவனமான Wing, தனது ஆளில்லா விமானங்களை அசெம்பிள் செய்வதற்கான ஒரு பிரிவை தமிழகத்தில் அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையிலான குழு அமெரிக்காவில் உள்ள கூகுள் உயர் அதிகாரிகளை சந்தித்தது. இதில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, உற்பத்தி ஆலை திறப்பு தொடர்பாக, செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க கூகுள் அதிகாரிகள் சென்னை வந்தனர்.
Apple மற்றும் Samsung போன்ற பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவில் போன்களை தயாரிப்பதற்கான முடிபை Google எடுத்துள்ளது.
சென்னை அருகே ஸ்ரீபெரும்பத்தூரில் உற்பத்தி ஆலை அமையும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |