நடுவானில் கடுமையாக குலுங்கிய Qatar Airways விமானம்., பயணிகள் காயம்
அயர்லாந்து சென்றுகொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானம் கடுமையாக குலுங்கியது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், கத்தார் ஏர்வேஸ் விமானம் QR017 தலைநகரான தோஹாவிலிருந்து (Doha) அயர்லாந்தின் தலைநகரான டப்ளினுக்கு (Dublin) புறப்பட்டது.
ஆனால் துருக்கி வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது விமானம் பலத்த குலுங்களுக்கு உள்ளானது.
இந்த சம்பவத்தில் 6 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, டப்ளின் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அவசர சேவைகள் வழங்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து விமானத்திற்கு வந்துள்ளனர். விமானத்தில் காயமடைந்த 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஐந்து நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமும் கடும் குலுங்களுக்கு உள்ளது. இச்சம்பவத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Turbulence hits Qatar Airways flight to Dublin, Turbulence, Qatar Airways