Gemini AI மூலம் Flipkart பொருட்களை நேரடியாக வாங்கும் வசதி - விரைவில் Google அறிமுகம்
Google Gemini to enable Flipkart shopping soon: Gemini AI Mode மூலம் Flipkart-ல் இருந்து பொருட்களை நேரடியாக வாங்கும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.
Gemini AI மூலம் Flipkart பொருட்களை நேரடியாக ஷாப்பிங் செய்யும் வசதி
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Google, தனது புதிய Gemini AI Mode மூலம் இந்தியாவின் முன்னணி ஓன்லைன் வணிக தளமான Flipkart-இல் இருந்து பொருட்களை நேரடியாக வாங்கும் வசதியை சோதனை செய்து வருகிறது.

Walmart-க்கு சொந்தமான Flipkart, இந்தியாவில் மிகப்பெரிய e-commerce தளங்களில் ஒன்றாகும்.
TechCrunch வெளியிட்ட தகவலின்படி, சில பயனர்களுக்கு Gemini AI Mode-இல் Flipkart பொருட்களின் பட்டியலில் ‘Buy’ பொத்தான் தோன்றுகிறது. அந்த பொத்தானை அழுத்தும் போது, பயனர் AI இடைமுகத்திலிருந்து வெளியேறாமல் நேரடியாக Flipkart checkout பக்கத்துக்கு செல்ல முடிகிறது.
இதன் மூலம், ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் அசெசரீஸ் போன்ற சில பொருட்களை வாங்கும் சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
Google நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், “பயனர்கள் வணிக நிறுவனங்களுடன் எளிதாக இணைந்து, புதிய அனுபவங்களை பெறுவதற்காக புதிய அம்சங்களை சோதனை செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், முழுமையான விவரங்களை வெளியிட மறுத்துள்ளார்.
இந்த சோதனை அக்டோபர் மாதம் பண்டிகை காலத்தில் பரவலாக அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் AI பயன்பாட்டின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், Google-Flipkart கூட்டணி வணிகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், Google இந்த ஆண்டு Universal Commerce Protocol (UCP) என்ற திறந்த தரநிலையை அறிமுகப்படுத்தியது. இது வணிகர்களின் பொருட்கள் மற்றும் AI ஏஜென்டுகளுக்கிடையே பாலமாக செயல்பட்டு, பாதுகாப்பான checkout அனுபவத்தை வழங்குகிறது.
Flipkart போன்ற வணிகர்களுடன் இணைந்து, இந்திய வாடிக்கையாளர்களுக்கு AI வழியாக வாங்கும் வசதியை Google வழங்க திட்டமிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |