8.7 மில்லியன் டொலர் பரிசு! கூகுள் நிறுவனம் மூலம் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்! யார் இந்த அமன் பாண்டே?
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டில் உள்ள குறைகளை கண்டுபிடித்த இந்திய இளைஞருக்கு சுமார் ரூ.65 கோடி சன்மானம் அறிவித்துள்ளது.
இந்திய இளைஞர் Aman Pandey என்பவர் ஆண்ட்ராய்டில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து அதற்கான தீர்வுகளையும் வழங்கியுள்ளார். இதையடுத்து கூகுள் நிறுவனம் அவரை பாராட்டி 8.7 மில்லியன் டொலர் பரிசு அறிவித்துள்ளது.
இவர் சைபர் செக்யூரிட்டி ரிசர்ச்சராக பணியாற்றி வருகிறார். அவர் வழங்கிய தகவல்களை கூகுள் நிறுவனம் ஆய்வு செய்து அவரை பாராட்டியுள்ளது. மேலும் அவரை ஊக்கப்படுத்தும் வகையில் சன்மானம் கொடுத்தும் அசத்தியுள்ளது.
இது குறித்து கூகுள் நிறுவனம் கூறியதாவது, Bugsmirror நிறுவனத்தை சேர்ந்த Aman Pandey கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் 232 குறைபாடுகளை கண்டறிந்து அதுதொடர்பாக விரிவான தகவல்களை சமர்ப்பித்துள்ளார்.
இதன்மூலம் எங்கள் திட்டத்தை வளர்ச்சி அடைய Aman Pandey முக்கிய பங்கு வகித்து உள்ளார். இவர் Bug bounty program திட்டத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனம் தனது சாப்ட்வேரில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை கண்டுபிடிப்புபவர்களுக்கு வெகுமதி அளிக்கிறது. அதன்படி Aman Pandey-விற்கு பங்களிப்புகளுக்காக கூகுள் அவரை அங்கீகரித்து சுமார் 8.7 மில்லியன் டொலர்களை பரிசாக வழங்கியுள்ளது.