இந்தியாவில் AI செயலியை இலவசமாக வழங்கும் கூகிள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஜெமினியின் மேம்பட்ட வடிவம் மற்றும் Veo 3 இந்திய மாணவர்களுக்கு கூகிள் இலவசமாக வழங்குகிறது.
AI யுகத்தில், மாணவர்கள் தொடங்கி ஐடி ஊழியர்கள் வரை, தங்களது பணிகளை முடிக்க AI செயலிகளை பயன்படுகின்றனர்.
மாணவர்கள், தங்களது வீட்டுப்பாடத்தை எழுதுவது முதல் ஆராய்ச்சி வரை பல பணிகளுக்கு Chatgpt, gemini போன்ற செயலிகள் உதவுகிறது.
இந்திய மாணவர்களுக்கு இலவசம்
இந்நிலையில், கூகிள் நிறுவனம் தனது AI யான ஜெமினி செயலியின் மேம்பட்ட வடிவை, இந்திய கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் விலை ரூ.19,500 ஆகும்.
இதில் VEO 3 என்னும் AI அடிப்படையிலான வீடியோ(Text to Video) உருவாக்கும் கருவியையம் இலவசமாக பயன்படுத்த முடியும். மேலும், படங்கள் மற்றும் வீடியோக்களை சேமிக்கும் வகையில் 2TB கிளவுட் ஸ்டோரேஜ் வசதியும் கிடைக்கும்.
If you’re a student in India - you’ve just been granted access to a FREE Gemini upgrade worth ₹19,500 for one year 🥳✨
— Google India (@GoogleIndia) July 15, 2025
Claim and get free access to Veo 3, Gemini in Google apps, and 2TB storage 🔗 https://t.co/3Hc8Yjzbw2.@GeminiApp pic.twitter.com/IRwLst3kCi
இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், வரும் செப்டம்பர் 15 ஆம் திகத்திக்கு முன்னர் விண்ணப்பித்து ஒரு வருடத்திற்கு இந்த இலவச சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த இலவச சேவையை பெற goo.gle/freepro என்பதை கிளிக் செய்து, உங்கள் பெயர், கல்லூரி, பிறந்த திகதி, ஈமெயில் கணக்கு ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். நீங்கள் கல்லூரி மாணவர் என கூகிள் உறுதி செய்த பின்னர் இந்த இலவச சேவைகளை நீங்கள் பயன்படுத்த முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |