பிரித்தானியாவில் 5 பில்லியன் பவுண்டு முதலீடு செய்வதாக அறிவித்த Google
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பிரித்தானிய வருகையை முன்னிட்டு, பிரித்தானியாவில் 5 பில்லியன் பவுண்டு முதலீடு செய்யவுள்ளதாக கூகுள் Google அறிவித்துள்ளது.
"இந்த முதலீடு பிரித்தானியாவின் AI திறனையும் சமூக சேவைகளையும் மேம்படுத்தும்" என Alphabet நிறுவனத்தின் தலைவர் Ruth Porat தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக லண்டனுக்கு வடக்கே உள்ள Waltham Cross பகுதியில் புதிய தரவுத்தள அமையம் அமைக்கப்படுகிறது.
இது Google Cloud, Workspace, Search மற்றும் Maps போன்ற AI சேவைகளுக்காண தேவையை பூர்த்தி செய்யும்.
Google-ன் கணிப்புப்படி, இந்த முதலீடு ஆண்டுக்கு 8250 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இந்த முதலீடு பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் நம்பிக்கையை காட்டுவதாக பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தில் நோபல் பரிசு பெற்ற Demis Hassabis தலைமையிலுள்ள DeepMind நிறுவனத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், Google மற்றும் Shell நிறுவனங்கள் இணைந்து பிரித்தானியாவில் கூகுளின் தரவுத்தளங்களுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump Visit to UK, Google invest in UK AI, Google Data center UK