AI காலத்திற்கு செய்தியாளர்களை மேம்படுத்தும் Google! இந்தியாவில் AI Skills Academy தொடக்கம்
தற்போதைய AI காலத்திற்கு ஏற்ப செய்தியாளர்களை மேம்படுத்தும் நோக்கில், Google இந்தியாவில் புதிய பயிற்சி திட்டத்தை தொடங்கியுள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google), இந்திய செய்தித்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், Google News Initiative AI Skills Academy-யை இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது.
இந்த புதிய முயற்சி, Indian Institute of Mass Communication (IIMC) நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வி அகாடமி ஒரு 10 வாரங்கள் கொண்ட ஹைபிரிட் பயிற்சி தொடர் ஆகும். இதில், செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடக கற்பித்தியாளர்கள், AI பற்றி அடிப்படைத் தகவல்களையும், Google-இன் AI கருவிகள் (NotebookLM, Gemini, AI Studio, Pinpoint) ஆகியவற்றின் நடைமுறை பயன்பாட்டையும் கற்றுக்கொள்ளவுள்ளனர்.
இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள், செய்தித் தயாரிப்பு பணிகளை வேகமாகவும், தீவிரமாகவும் செய்ய முடியும். இதில் வாரந்தோறும் தெளிவான பயிற்சிகள், வழிகாட்டுதல், மற்றும் பிரச்சனை தீர்க்கும் அம்சங்கள் இடம்பெறுகின்றன.
Google கூறுகையில், “AI மூலம் செய்தித்துறையில் புரட்சி ஏற்படுவதால், ஊடக வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு இதன் பயன்பாடு மிக முக்கியம்” என தெரிவித்துள்ளது. IIMC-யின் ஆறு நகரங்களில் உள்ள மாணவர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படும்.
இந்த முயற்சி, பொறுப்புடன் செயற்கை நுண்ணறிவு (Responsible AI) பயன்படுத்தி, புதுமையான செய்திக்காணொளிகளை உருவாக்க ஊக்குவிக்கும் எனக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |