இந்தியாவுக்கான முதல் வேளாண்மை AI மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ள Google
Google நிறுவனம், இந்தியாவுக்கான முதல் வேளாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Google DeepMind-இன் AnthroKrishi குழு உருவாக்கிய இந்த மாடல்கள், விவசாய நிலங்களைப் புரிந்துகொள்வதற்கும், பயிர் நிலைமைகளை கண்காணிப்பதற்கும் உதவுகின்றன.

இரண்டு முக்கிய மாடல்கள்
Agricultural Landscape Understanding (ALU): நிலத் தரவுகளை ஆய்வு செய்து, விவசாய நிலப் படங்களை அடையாளம் காண உதவுகிறது. இது நில வரைபடம், நிலப் பயன்பாடு, டிஜிட்டல் வேளாண்மை போன்ற பயன்பாடுகளுக்கு உதவுகிறது.
Agricultural Monitoring and Event Detection (AMED): பயிர் நிலைமைகள், நிலப் பயன்பாட்டில் மாற்றங்கள், விவசாய சம்பவங்களை கண்காணிக்கிறது. ALU-உடன் இணைந்து பயன்படுத்தப்படும் போது, பெரிய அளவில் பயிர் கண்காணிப்பு செய்ய முடிகிறது.
இந்த மாடல்கள், Google Earth-இல் தரவு அடுக்குகளாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவைத் தவிர கென்யா, உகாண்டா, கானா, ருவாண்டா, நைஜீரியா, சாம்பியா போன்ற நாடுகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பயன்பாட்டு உதாரணங்கள்
CarbonFarm: குறைந்த கார்பன் அரிசி சாகுபடிக்கு ALU API மற்றும் ஜெமினியைப் பயன்படுத்தியுள்ளது, 2030 க்குள் 2 மில்லியன் ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
TerraStack (IIT Bombay startup): 140 மில்லியன் ஹெக்டேர் நில வரைபடமாக்க பயன்படுத்தியுள்ளது.
கர்நாடகா நீர்வளத் துறை: 2.6 மில்லியன் ஹெக்டேர் பாசன நிலங்களுக்கு நீர் மேலாண்மை செய்ய பயன்படுத்தியுள்ளது.
Telangana ADeX: டிஜிட்டல் வேளாண்மை சேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளது.
இந்த AI மாடல்கள், precision agriculture, irrigation planning, crop monitoring போன்ற துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |