Google வெளியிட்ட Nano Banana Pro - இலவசமாக முயற்சி செய்யலாம்
Google தனது புதிய Nano Banana Pro எனப்படும் மேம்படுத்தப்பட்ட AI Image உருவாக்கும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Gemini 3 Pro அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த AI செயலி “உங்கள் கற்பனைகளை ஸ்டூடியோ தரத்தில் மாற்றும் திறன்” கொண்டதாக Google தெரிவித்துள்ளது.
முந்தைய Nano Banana மாடல், 3D பிம்பங்களை உருவாக்கும் திறனால் வைரலானது.
இப்போது, Pro version 14 படங்களை ஒரு சேர இணைத்து புதிய காட்சிகளை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது. மேலும், ஒரே படத்தில் 5 பேர் வரை இணைக்க முடியும்.

இந்த மாடல், போஸ்டர், அழைப்பிதழ், இன்ஃபோகிராபிக்ஸ் போன்றவற்றை உருவாக்குவதற்கு சிறந்ததாகும்.
முக்கியமாக, படங்களில் நேரடியாக வாசிக்கக்கூடிய எழுத்துகளை (tagline அல்லது paragraph) பல மொழிகளில் உருவாக்கும் திறன் கொண்டது.
பயனர்கள், ஒளி, நிறம், கேமரா கோணம், focus, bokeh effect போன்றவற்றை எளிதில் மாற்றலாம்.
பகல்-இரவு மாற்றம், color grading போன்ற மேம்பட்ட எடிட்டிங் வசதிகளும் இதில் உள்ளது. 4K resolution வரை பல aspect ratio-களில் படங்களை உருவாக்க முடியும்.
Google, இந்த மாடலில் C2PA metadata இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம், AI உருவாக்கிய படங்களை deepfake-களிலிருந்து வேறுபடுத்த எளிதாகும். TikTok கூட இதே watermark முறையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
Nano Banana Pro, உலகளவில் Gemini app-ல் “Create image” விருப்பத்தில் இலவசமாக முயற்சி செய்யலாம். ஆனால், இலவசமாக பயன்பாட்டிற்கு quota வரம்பு இருக்கும்.
Google AI Plus, Pro, Ultra சந்தாதாரர்களுக்கு கூடுதல் வசதிகள் வழங்கப்படும்.
இந்த புதிய முயற்சி, AI பட உருவாக்கத்தில் Google-ஐ முன்னணியில் நிறுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Google Nano Banana Pro AI, Nano Banana Pro free trial, Google AI image generator 2025, Gemini 3 Pro based model, AI poster and infographic tool, Google C2PA metadata images, AI text-to-image generation, Google AI Plus Pro Ultra features, 4K resolution AI image creation, Google creative AI technology