Google-ன் Core team-லிருந்து 200 ஊழியர்கள் பணிநீக்கம்
உலகின் மிகப்பாரிய தொழில்நுட்ப நிறுவனமான Google-ல் பணிநீக்கம் தொடர்கிறது.
செலவுக் குறைப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த Python குழுவையும் பணிநீக்கம் செய்த கூகுள் நிறுவனம், சமீபத்தில் மேலும் 200 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
இவர்கள் அனைவரும் முக்கிய (Core Team) குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த மாதம் 25-ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
அவர்களில் Californiaவின் Sunnyvale-ல் உள்ள அலுவலகங்களில் பொறியியல் துறை ஊழியர்கள் உள்ளனர்.
அமெரிக்காவிற்கு வெளியே மலிவான பணியாளர்கள் கிடைப்பதால் இந்த பணியிடங்கள் இந்தியா மற்றும் மெக்சிகோவிற்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Python, Flutter மற்றும் Dart ஆகியவற்றில் பணிபுரியும் குழுக்களில் இருந்து பல ஊழியர்களை Google ஏற்கனவே நீக்கியுள்ளது. நிறுவனத்தில் உள்ள பிற வேலைகளுக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Google, Google Lay-off, Tech Giant Google