கூகுள் மேப் குழுவினரை தாக்கிய கிராம மக்கள் - என்ன நடந்தது?
கூகுள் மேப் குழுவினர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கூகிள் மேப் உலகளவில், பயனர்களால் இருப்பிடம் மற்றும் பாதைகளை கண்டறிய பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கூகிள் மேப்பில் வரைபடம் துல்லியமாக தெரிவதற்காக, அவ்வபோது அதிநவீன கேமரா உதவியுடன் வரைபடங்களை மேம்படுத்துவது உண்டு.
கூகிள் மேப் குழுவினரை தாக்கிய மக்கள்
இதேபோல், இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கூகிள் மேப் குழுவினர் கேமரா மற்றும் இயந்திரங்கள் அடங்கிய வாகனத்தில் அங்கு உள்ள தெரு பகுதிகளை வரைபடமாக்கி கொண்டிருந்தனர்.
அந்த பகுதியில் சமீபத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், இவர்களும் திருடுவதற்காக அந்த பகுதிகளை நோட்டமிடுவதாக நினைத்த உள்ளூர் மக்கள், வாகனத்தை இடைமறித்து அந்த குழுவினருடன் வாக்குவாதம் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கூகிள் மேப் குழுவினர், முன்னதாக உள்ளூர் தலைவர்களிடம் தகவல் தெரிவிக்காமல் சென்றதால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என காவல்துறையினர் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |