Google Street View-ல் கிடைத்த தடயம்! ஸ்பெயின் கையும் களவுமாக சிக்கிய கொலையாளிகள்
ஸ்பெயினில் கொடூரமான கொலை வழக்கானது Google Street View-ல் கிடைத்த தடயம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Google Map-ஆல் சிக்கிய கொலையாளிகள்
ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் 32 வயதான ஜார்ஜ் லூயிஸ் பெரெஸின்(Jorge Luis Perez) கொலையில் தொடர்புடையதாகக் கூறி, கியூபன் ஆண் ஒருவர் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு ஒரு திரைப்படத்தின் திருப்பத்தை போல, சாதாரணமான Google Street View படம் முக்கியமான தடயமாக வெளிப்பட்டது.
சவுதி அரேபியா விடுத்த கடும் எச்சரிக்கை! 4,300 பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு
அருகிலுள்ள கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், குற்றவாளியாகக் கருதப்படும் ஆண், ஒரு பொருளை காரின் டிரங்கில் ஏற்றுவதாகக் காட்டுகிறது. அந்த பொருள், கொல்லப்பட்டவரின் உடலாக இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர்.
உயிரிழந்த ஜார்ஜ் லூயிஸ் பெரெஸின் அண்டலுஸ்(Andaluz) கிராமத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது உடலின் சில பாகங்கள் அங்கேயே புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றவாளியாக கருதப்படும் ஆண் வசிக்கும் தஜுக்கோ கிராமம் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த கைதுகள், தொழில்நுட்பத்தின் பங்கு குற்றங்களை தீர்ப்பதில் எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பது குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.
ஸ்பெயின் தேசிய பொலிஸார் கைதுக்கு வழிவகுத்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
பெரெஸின் உறவினர், அவரிடமிருந்து வந்த சந்தேகத்திற்கிடமான செய்திகளுக்கு பிறகு, கடந்த நவம்பர் 2023 இல் அவரை காணவில்லை என்று புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |