Google Mapsல் இனி Assistant Driving Mode அம்சம் கிடைக்காது., மாற்றாக வந்த Android Auto
கார் ஓட்டுவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் கூகுள் மேப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
2020-ஆம் ஆண்டிலேயே, கூகுள் மேப்ஸின் Assistant Driving Mode அம்சம் அதன் பக்கத்தில் இருந்து நிறுத்தப்படும் என்று கூகுள் அறிவித்தது.
ஆனால், கூகுள் மேப் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இப்போது அசிஸ்டண்ட் டிரைவிங் அம்சத்தை நிறுத்தப் போகிறது.
கூகுள் மேப் அசிஸ்டண்ட் டிரைவிங் மோடு பிப்ரவரி 2024ல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google Maps Assistant Driving Mode-ன் சிறப்பு என்ன?
கூகுள் மேப்பின் அசிஸ்டெண்ட் டிரைவிங் மோடு என்பது போனில் உள்ள Dashboard ஆகும், இதில் media suggestion, audio control மற்றும் map போன்ற அம்சங்களைக் காணலாம்.
Android Auto
இந்நிலையில், Assistant Driving Modeக்கு மாற்றாக Android Autoவை பயன்படுத்தலாம்.
Android Auto என்பது கூகுளின் தயாரிப்பாகும், இது கார் ஓட்டுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மொபைலை காரின் entertainment boardஉடன் இணைக்க அனுமதிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Google Maps Assistant Driving Mode, Android Auto, Google