கூகுள் மேப் உதவியால் 20 வருடங்கள் தலைமறைவாக இருந்த கொள்ளைக் கூட்ட தலைவனை பிடித்த பொலிஸ்! எப்படி?
20 வருடங்களாக தலைமறைவாக இருந்த கொள்ளைக் கூட்ட தலைவனை, கூகுள் மேப்ஸ் உதவியால் ஸ்பெயினில் வைத்து இத்தாலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Stidda என்ற கொள்ளைக் கூட்டத்தின் முக்கிய புள்ளியான Gioacchino Gammino, கடந்த 2002ல் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள சிறையிலிருந்து தப்பியோடிள்ளான்.
பல வருடங்களுக்கு முன் செய்த கொலைக்காக, 2003ல் Gioacchino Gammino-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2002ல் இத்தாலி சிறையிலிருந்து தப்பியோடிய Gioacchino Gammino-வை, ஸ்பெயினின் Galapagar-ல் வைத்து இத்தாலி பொலிஸார் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.
Galapagar-ல் போலி பெயரில் வாழ்ந்து வந்த Gammino-வை, கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ புகைப்படத்தின் உதவியால் அடையாளம் கண்டு கைது செய்ததாக இத்தாலி பொலிஸ் தெரிவித்துள்ளது.
அதாவது, கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ படத்தில், Gammino போல் தோற்றமளிக்கும் நபர் ஒருவர் பழைக் கடைக்கு முன் இருப்பதை இத்தாலி பொலிஸ் அடையாளம் கண்டுள்ளனர்.
இதை வைத்து முன்னெடுத்த விசாரணைக்கு பிறகு Galapagar-ல் வைத்து Gammino-வை இத்தாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தற்போது ஸ்பெயினில் காவலில் இருக்கும் Gammino-வை பிப்ரவரி மாத இறுதியில் இத்தாலிக்கு கொண்ட வர திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், Gammino பிடிக்க உதவிய கூகுள் மேப்ஸ் செயலிக்கு இத்தாலி காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது.