புதிய அம்சங்களுடன் அசத்தும் கூகுள் மேப்ஸ்: A.I அம்சங்களுடன் கொடுத்த இன்ப அதிர்ச்சி
பயனர்களை கவரும் வகையில் கூகுள் மேப்ஸ் புதிய அம்சங்களை அப்டேட் செய்துள்ளது.
கூகுள் மேப்ஸில் புதிய அம்சங்கள்
தற்போது ஸ்மார்ட் போன்களில் உள்ள கூகுள் மேப்ஸின் உதவியுடன் மொழி தெரியாத எந்தவொரு நாட்டிற்கும், எந்தவொரு இடத்திற்கும் நம்மால் செல்ல முடியும்.
அப்படிப்பட்ட வழிகாட்டி செயலியில் புதிய அம்சங்களை கூடுதலாக இணைத்துள்ளது.

இந்த புதிய அம்சங்களின் கீழ், கூகுள் மேப்ஸ் ஆனது கூகுளின் A.I ஜெமினி உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது பயனர்களுடன் நேரடி நிகழ்நேர உரையாடலை நடத்தி துல்லியமான வழிகாட்டுதலை வழங்கும்.
அத்துடன் கூகுள் மேப்ஸ் ஆனது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் சாலைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடைகள், மற்றும் மாற்றுப்பாதைகள் குறித்த தகவல்களை விரைவாக பயனர்களுக்கு காட்டும்.
மேலும் விபத்து ஏற்படக் கூடிய ஆபத்தான இடங்களை நெருங்கும் போது முன்னதாகவே பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கும்.

பிற அம்சங்கள்
கூகுள் மேப்ஸ் செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் வாங்கி கொள்ளும் வசதி, கூகுள் வாலட் இணைப்பு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்காக புதிய அவதார் வசதியையும் கூகுள் மேப்ஸ் வழங்குகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |