Google - பெயர் வந்தது எப்படி? அதன் அர்த்தம் தெரியுமா? அறிந்துகொள்ளவேண்டிய சுவாரசியமான வரலாற்று தகவல்!
உலகின் மிகப்பெரிய தேடுபொறி Google - அதன் பெயருக்குப் பின்னால் ஒரு கணிதப் பொருளைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்து பல சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
'கூகிள்' தான் உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் தேடுபொறி என்பதில் சந்தேகமில்லை. தற்போதையை காலகட்டத்தில் கிட்டத்தட்ட நம்முடைய எல்லா தேவைகளுக்கும் ஒரே தீர்வாக நாம் நினைப்பது இந்த Google-ஐ தான்.
இதில் என்ன கேட்டாலும், என்ன தேடினாலும் அதற்கான ஒன்றல்ல, பல பத்திகளை தீர்வுகள் கிடைக்கும். நாமே உணராமல் ஒரு நாளில் நூற்றுக்கணக்கான முறை அதை பயன்படுத்துகிறோம்.
ஆனால், கூகிள் என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இதன் பின்னணியில் இருக்கும் உண்மையான அர்த்தம் என்ன?
கூகிள் - இரண்டு கல்லூரி மாணவர்களான லாரி பேஜ் (Larry Page) மற்றும் செர்ஜி பிரின் (Sergey Brin) ஆகியோரால் தொடங்கப்பட்டது.
1995-ஆம் ஆண்டில், செர்ஜி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக இருந்தார். அப்போது, லாரி தனது பட்டப்படிப்பிற்காக ஸ்டான்போர்டில் சேர்ந்தார். அப்போது, லாரிக்கு கல்லூரியை சுற்றிக்காட்ட செர்ஜி நியமிக்கப்பட்டார்.
நண்பர்களான இருவருக்கும் ஒரு வலைத்தளத்தை உருவாக்கும் பார்வை இருந்தது. தங்கள் கல்லூரி ஓய்வறைகளில் இருந்து பணிபுரிந்த அவர்கள் ஒரு தேடுபொறியை உருவாக்கி முதலில் அதற்கு 'Backrub' என்று பெயரிட்டனர்.
இருப்பினும், விரைவில் 'Backrub' - 'Googol' என மறுபெயரிடப்பட்டது.
Googol என்பது எண் 1-ஐ தொடர்ந்து 100 பூஜ்ஜியங்கள் இருப்பதை விவரிக்க பயன்படுத்தப்படும் ஒரு கணித சொற்கூறு ஆகும். (Mathematical Term)
அப்போ Googol என்று தானே பெயர் இருக்கவேண்டும், பிறகு ஏன் Google என இருக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உண்மையில் Googol என்று தான் பெயர் வைக்க நினைத்துள்ளனர். ஆனால், லாரி பேஜ் அதன் ஸ்பெல்லிங்கை தவறாக எழுதியதால் Google என வைத்து விட்டனர்.
சரி, இந்த Googol என்ற சொல் எப்படி உருவானது தெரியுமா?
Google நிறுவனத்திற்கு இந்த பெயர் வைக்கப்படுவதற்கு, குறைந்தது 70 ஆண்டுகளுக்கு முன் இந்த வார்த்தை முதன் முதலில் கணிதவியலாளரான எட்வர்ட் காஸ்னர் (Edward Kasner) என்பவரால் பயன்படுத்தப்பட்டது.
எட்வர்ட் காஸ்னர் 1920-ல் நியூ ஜெர்சி பாலிசேட்ஸில் தனது மருமகன்களான மில்டன் சிரோட்டா மற்றும் எட்வின் சிரோட்டா (Milton Sirotta and Edwin Sirotta) ஆகியோருடன் நடந்து கொண்டிருந்தபோது, காஸ்னர் அவர்களைப் பார்த்து, மிகப்பெரிய எண் (large number) என்பதை குறிக்கும் ஒரு புதிய வார்த்தையை பயன்படுத்த விரும்புவதாக கோரியபோது, மில்டன் சொன்ன வார்த்தை தான் 'Googol'.
அந்த வார்த்த காஸ்னருக்கு மிகவும் பிடித்தது. அவர் தனது 'Mathematics and the Imagination’ என்ற கணித புத்தகத்தில் Googol என்ற வார்த்தையை முதல் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதேபோல், Milton Sirotta 'Googolplex' என்ற மற்றோரு வார்த்தையும் புதிதாக கூறினார். அதற்கு அர்த்தம் - 'எண் 1-க்கு பின் நாம் சோர்ந்துபோகும் வரை ஜீரோக்களை அடுக்குவது' என்று பொருளாகும். அதாவது, எல்லையே இல்லாத ஒரு எண்.
அதற்கேற்ப, கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் அமைந்துள்ள கூகிளின் தலைமையகத்திற்கு Googleplex என பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
On April 2, 1878, American mathematician Edward Kasner was born, best remembered for introducing the term “googol” https://t.co/UXc88pI8n3 pic.twitter.com/TzQet4aJoj
— SciHi (@SciHiBlog) April 3, 2017