அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம்
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை திட்டமிட ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் கைகோர்த்துள்ளது.
ரிலையன்ஸ் பொதுக்கூட்டத்தில் கூகுள், மெட்டா
ரிலையன்ஸ் நிறுவனத்தின்(Reliance Industries) வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி(Mukesh Ambani) உடன் இணைந்து கூகுள்(Google) நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை(Sundar Pichai) மற்றும் மெட்டா(Meta) நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்(Mark Zuckerberg) காணொளி மூலம் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த புதிய கூட்டாண்மையின் நோக்கமாக, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் எல்லா இடங்களிலும் செயற்கை நுண்ணறிவை(AI) கிடைக்கச் செய்வதே இலக்கு என மூவரும் அறிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ்
மெட்டா உடன் கைகோர்த்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இந்தியாவில் AI-ஐ மையமாக கொண்ட “ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ்”( Reliance Intelligence) என்ற துணை நிறுவனத்தை நிறுவி இந்தியர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கான பிரத்யேக AI தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் இணைந்து இதற்காக சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்(ரூ.855 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இந்த ஒதுக்கீட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு 70% சதவீதமாகவும், மெட்டாவின் பங்கு 30% சதவீதமாகவும் இருக்கும் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய மார்க் ஜூக்கர்பெர்க், இந்தியாவின் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளவும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி இந்தியர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுமே இந்த புதிய கூட்டணியின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மிகப்பெரிய டேட்டா சென்டர்
அதே சமயம் கூகுளுடன் கைகோர்த்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், குஜராத்தின் ஜாம்நகரில் $20 - 30 பில்லியன் மதிப்பிட்டில் AI-க்கான மிகப்பெரிய டேட்டா சென்டரை கட்ட திட்டமிட்டுள்ளது.
இது இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பாக இருக்கும்.
இது தொடர்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, இந்த புதிய கூட்டாண்மை ஜாம்நகரில் கூகுள் கிளவுட் அமைப்பை நிறுவும் என அறிவித்துள்ளார்.
மேலும் கூகுளுக்கு இந்தியா எவ்வளவு முக்கியம் என்றும், இந்தியாவுக்கு கூகுள் எப்போதும் சிறப்பு இடம் வழங்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |