300 சதவீத salary hike அறிவித்த Google., பயம்காட்டிய ஸ்டார்ட்-அப் நிறுவனம்
Google நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு 30 சதவீதம், 50 சதவீதம் சம்பள உயர்வு வழங்குவதை கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் 300 சதவீதம் சம்பள உயர்வு என்பது இதுவே முதல் முறை.
தற்போது கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஏன் 300 சதவீத ஊதிய உயர்வை அறிவித்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இந்திய Driving Licence இருந்தால் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 10 வெளிநாடுகள்., பட்டியலில் 5 ஐரோப்பிய நாடுகள்!
கூகுள் நிறுவனம் இப்போது தனது ஊழியர்களை நிறுவனத்தில் வைத்திருப்பதில் மிகப்பாரிய சவாலை எதிர்கொள்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த AI ஸ்டார்ட்அப் Perplexity இப்போது கூகுள் ஊழியர்களை நல்ல சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்த உள்ளது.
இந்த தகவலை அறிந்த கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 300 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட AI ஸ்டார்ட்-அப் நிறுவனமான Perplexity-யின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தியாவில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (Arvind Srinivas) ஆவார், இவர் IIT Madras-ல் பட்டம் பெற்றார்.
அரவிந்த் தனது பெர்பெக்சிட்டி AI தொடக்கத்திற்காக கூகுளின் திறமையான பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளார்.
இதற்காக சில கூகுள் ஊழியர்களை தொடர்பு கொண்டு நேர்காணல் நடத்தி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அங்கு Google-ஐ விட சிறந்த ஊதியம் வழங்க தயாராக உள்ளது..
Perfectity AI ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தொடர்பு கொண்டு ஆஃபர் லெட்டர் கொடுத்த ஊழியர்களின் தகவலை கூகுள் பெற்றுள்ளது.
தற்போது கூகுள் நிறுவனத்தில் தனது ஊழியர்களை தக்கவைக்க 300 சதவீத சம்பள உயர்வை அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிக்கொண்டிருக்கும் நிலையில், கூகுளின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து பேசிய அரவிந்த் ஸ்ரீனிவாஸ், தாங்கள் ங்கள் தொடர்பு கொண்ட மற்றும் நேர்காணல் செய்த ஊழியர்களுக்கு Offer Letter வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் தற்போது அந்த ஊழியர்கள் கூகுள் ஊழியர்களாக உள்ளனர். அவர்கள், நோட்டீஸ் பீரியட், ரிலீவிங் லெட்டர் உள்ளிட்ட சில செயல்முறைகளை முடித்துவிட்டு நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும்.
ஆனால் AI ஸ்டார்ட்-அப் நிறுவனமான பெர்பெக்சிட்டியின் சலுகையால் கூகுள் இப்போது விழித்துள்ளது.
இவ்வாறு கற்பனை செய்ய முடியாத சம்பள உயர்வை வழங்குகிறது. இதனால் ஊழியர்கள் தயங்குவதாக அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறினார்.
AI ஸ்டார்ட்அப் நிறுவனமான Perfectity தேர்ந்தெடுத்த கூகுள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அனால், Perfectity AI ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒரு பாரிய சலுகை மூலம் திறமையான ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தயாராகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Google Salary Hike, Perfectity AI Startup, Perfectity CEO Arvind Srinivas, Perfectity Job Opertunity, Perfectity Job offer letter